சுதந்திர தினமன்று ஆயிரம் ரூபா காசுகள் 75

0
165

கொழும்பு, காலி முகத்திடலில் எதிர்வரும் பெப்ரவரி 04 ஆம் திகதி நடைபெறவுள்ள 75ஆவது சுதந்திர தின நிகழ்வுகளுக்கு 200 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளதாக பொதுநிர்வாக உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் நீல் பண்டார ஹபுஹின்ன உறுதிப்படுத்தியுள்ளார்.

இந்த விழாவுக்குத் தேவையான ஒதுக்கீடுகளை திறைசேரி ஏற்கனவே செய்துள்ளது. இந்நிகழ்வை ஒழுங்கமைப்பதற்கான செலவினங்களைக் குறைக்க அமைச்சு தன்னால் இயன்ற முயற்சிகளை மேற்கொண்டு வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார் .

சுதந்திர தினத்தை முன்னிட்டு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் 1,000 ரூபா நாணயக் குற்றிகள் 75 வெளியிடப்படவுள்ளன.

தேசிய சுதந்திர தினத்தை முன்னிட்டு கடந்த (03) திகதி அமைச்சு வளாகத்தில் நடைபெற்ற முன்னேற்ற மீளாய்வு கூட்டத்தின் போது “நமோ நமோ மாதா, நூற்றாண்டுக்கு ஒரு படி” என்ற தொனிப்பொருளில் சுதந்திர தினத்தை கொண்டாட அரசாங்கம் தீர்மானித்திருந்தது. மேலும் விழாவை முன்னிட்டு நான்கு நாள் ஒத்திகை நடத்தப்படுமென்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here