இலங்கையின் 76 ஆவது சுதந்திர தின விழாவில் நிகழ்சின் இறுதியில் தமிழ் மொழியில் தேசிய கீதம் இசைக்கப்பட்டது.
சுதந்திர தின விழா ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் இன்று காலை காலி முகத்திடலில் நடைபெற்றது. பிரதம அதிதியாக தாய்லாந்து பிரதமர் பங்கேற்றிருந்தார்.
நிகழ்வின் ஆரம்பத்தில் பாடசாலை மாணவர்களால் சிங்கள மொழியில் தேசிய கீதம் இசைக்கப்பட்டது. பிரதான நிகழ்வுகளுக்குப் பின்னர், நிகழ்வின் நிறைவில் தேசிய கீதம் தமிழ்மொழியில் இசைக்கப்பட்டது.
 
		
