சுனாமியால் சேதமடைந்த அணுமின் நிலையத்தை மீண்டும் தொடங்க ஜப்பான் முடிவு

0
45

ஜப்பானின் நிகாட்டா மாகாணம் புகுஷிமா நகரில் உலகின் மிகப்பெரிய அணுமின் நிலையம் அமைந்துள்ளது. கடந்த 2011-ம் ஆண்டு 9 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம் அங்கு ஏற்பட்டது. இதில் புகுஷிமா அணுமின் நிலையத்தின் உலைகள் சேதமடைந்தன. இதனால் ஏற்பட்ட கதிர்வீச்சு அபாயத்தால் சுமார் 1.5 லட்சம் மக்கள் அங்கிருந்து வெளியேற்றப்பட்டனர். இதனையடுத்து புகுஷிமா அணுமின் நிலையத்தை உடனடியாக மூட அரசாங்கம் உத்தரவிட்டது. மேலும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இழப்பீடு தொகையும் வழங்கப்பட்டது.

இந்தநிலையில் அணுமின் நிலையத்தை மீண்டும் திறப்பது குறித்த வாக்கெடுப்பு நிகாட்டா மாகாணத்தில் நடைபெற்றது. இதில் அணுமின் நிலையத்தை மீண்டும் தொடங்குவதற்கு ஆதரவாக 50 சதவீதம் பேர் வாக்களித்தனர். எனவே அணுமின் நிலையத்தை மீண்டும் தொடங்குவதற்கான பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகின்றன. இதன் முதல்கட்டமாக 6-வது அணு உலையும், பின்னர் படிப்படியாக மற்ற அணு உலைகளும் பயன்பாட்டுக்கு வரும் என அணுமின் நிலைய நிர்வாகம் தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here