சுமார் 3000 கிலோ சுக்குடன் ஒருவர் கைது!

0
11

இலங்கை கடற்படை மற்றும் காவல்துறையினர் இணைந்து நுரைச்சோலை, சஞ்சிதவத்தையில் மேற்கொண்ட ஒருங்கிணைந்த தேடுதல் நடவடிக்கையின் போது 2,828 கிலோகிராம் சுக்கை (உலர்ந்த இஞ்சி) வைத்திருந்ததற்காக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

நுரைச்சோலை காவல்துறையினரின் உதவியுடன் வடமேற்கு கடற்படை கட்டளையின் கடற்படைப் பிரிவினால் இந்த தேடுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

சஞ்சிதவத்தையில் சந்தேகத்திற்கிடமான ஒரு வீட்டை சோதனை செய்தபோது, 70 சாக்குகளில் கடத்தப்பட்ட சுக்கு மீட்கப்பட்டது.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் நுரைச்சோலையைச் சேர்ந்த 33 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

சந்தேக நபர், மற்றும் பைப்பற்றப்பட்ட சுக்கு என்பன மேலதிக நடவடிக்கைகளுக்காக நுரைச்சோலை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டது.

இலங்கையில் சுக்கு ஒரு கிலோவின் விலை ஆயிரம் ரூபாவை விட அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here