இலங்கை தொழிலாளர் காங்கிரசின் தலைவரும் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான ஆறுமுகன் தொண்டமான் அவர்களின் பணிப்புரைக்கு அமைய மத்திய மாகாண இந்து கலாசார தோட்டஉட்டகட்டமைப்பு அமைச்சர் மருதபாண் ராமேஸ்ரைன் அவர்களின் வேண்டுகோளுக்கினங்க நோர்வூட் பிரதேசபையின் உறுப்பினர் திருமதி மாடசாமி சரோஜா வின் தலைமையில் 03.04.2018. செவ்வாய் கிழமை சுயதொழிலை ஊக்கிவிக்கும் நோக்கில் 46குடும்பங்களுக்கு கோலிக் குஞ்சுகள் பொகவந்தலாவ கெர்க்கஸ்வோலட் மத்தியபிரிவு, மேற்பிரிவு,கிழ்பிரிவு,எல்பட கிழ் பிரிவு, மேற்பிரிவு ஆகிய தோட்டபகுதிகளில் உள்ள குடும்பங்களுக்கு வழங்கி வைக்கபட்டது.
இந் நிகழ்வில் மத்திய மாகாண இந்து கலாசார தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சின் செயலாளர் திரு.நவரட்னம், அபிவிருத்தி உத்தியோகத்தர்கள்,யூ.என்,சந்திரிக்கா உடவலவ, சி.வேத்தேவ, பொகவந்தலாவ மிருகவைத்தியசாலையின் வைத்திய அதிகாரி திரு.நடராஜ், மற்றும் மாவட்ட தலைவர் கிருஷ்ணமூர்த்தி, உட்பட மற்றும் பலர் கலந்து கொண்டனர்
(பொகவந்தலாவ நிருபர். எஸ்.சதிஸ்)