சுரேஷ் சாலேவை 90 நாட்கள் தடுத்து வைத்து விசாரிக்க அனுமதி

0
13

அரச புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் சுரேஷ் சாலேவை 90 நாட்கள் தடுப்புக் காவலில் வைக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டு வரும், குற்றப் புலனாய்வுப் பிரிவினரால், கடந்த 25ஆம் திகதி காலை மேஜர் ஜெனரல் சுரேஷ் சாலே கைது செய்யப்பட்டிருந்தார்.

அவரை பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் 72 மணிநேரம் தடுத்து வைத்து விசாரிக்க பாதுகாப்பு அமைச்சினால் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், மேலதிக விசாரணைகளுக்காக, அவரை 90 நாட்கள் காவலில் வைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதற்குத் தேவையான அனுமதிகள் பெறப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

விசாரணைகள் தொடரும்போது மேலும் முன்னேற்றங்கள் எதிர்பார்க்கப்படுவதாகவும் காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here