சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை ஒகஸ்ட் மாதத்தில் 02 லட்சத்தை அண்மித்தது!

0
88

2025 ஆம் ஆண்டின் ஒகஸ்ட் மாதத்தில் 198,235 சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகை தந்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபைத் தெரிவித்துள்ளது.

2024 ஆம் ஆண்டின் ஒகஸ்ட் மாதத்துடன் ஒப்பிடுகையில் இந்த எண்ணிக்கை 20.4 வீத அதிகரிப்பு என தெரிவிக்கப்படுகிறது.

இந்த வருடத்தின் ஒகஸ்ட் மாதத்தில் இந்தியாவிலிருந்து மாத்திரம் 46,473 சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளனர்.

மேலும், கடந்த மாதத்தில் ஐக்கிய இராச்சியத்திலிருந்து 19,764 பேரும், ஜெர்மனியிலிருந்து 12,500 பேரும் நாட்டிற்கு வருகை தந்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி
அதிகார சபை தெரிவித்துள்ளது.

அத்துடன் சீனாவிலிருந்து 12,294 சுற்றுலா பயணிகளும் இத்தாலிலிருந்து 12,247 பேரும் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர்.

அதன்படி, 2025 ஆம் ஆண்டின் முதல் எட்டு மாதங்களில் இலங்கைக்கு வருகை தந்த மொத்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 1,566,523 ஆக பதிவாகியுள்ளது.

அவர்களில், 325,595 பேர் இந்தியாவைச் சேர்ந்தவர்கள் என்றும் 151,141 பேர் பிரித்தானியாவைச் சேர்ந்தவர்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here