இந்த வருடம் செப்டெம்பரில் இலங்கைக்கு 100,000 சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளனர். ஜனவரி மாதம் 01 முதல் செப்டெம்பர் மாதம் 30 ஆம் திகதி வரை மொத்தம் 1,016,256 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகைதந்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை வெளியிட்ட தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
2019 ஆம் ஆண்டுக்கு பின்னர் முதல் முறையாக அதிகளவான சுற்றுலா பயணிகள் வருகை தந்துள்ளனர்.
இவ்வாண்டு இறுதிக்குள் 155,000,000 சுற்றுலாப் பயணிகளின் வருகையை இலக்காக கொண்டுள்ளது.
கடந்த வாரம், இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை தலைவர் பிரியந்த பெர்னாண்டோ, கடந்த வருடங்களில் எதிர்கொண்ட சவால்களில் இருந்து உள்ளூர் சுற்றுலாத் துறை மீண்டு வருவதன் மூலம், ஆண்டு இறுதி இலக்கை இலங்கைகடந்து விடும் என நம்பிக்கை தெரிவித்தார்.