இலங்கைக்கு வருகைத்தரும் சுற்றுலாப்பயணிகள் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக இலங்கை சுற்றுலாத்துறை தெரிவித்துள்ளது.
கடந்த ஜனவரி முதல் ஏப்ரல் 15வரை சுமார் 7லட்சம் சுற்றுலாப்பயணிகள் வருகைத்தந்துள்ளனர். நாளொன்றுக்கு 3 சுற்றுலாப்பயணிகளாக தற்போது நாளொன்றுக்கு சுமார் 5 ஆயிரத்தை கடந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்களில் பெரும்பாலானவர்கள் இந்தியா மற்றும் பிரித்தானியாவை சேர்ந்தவர்கள் என்றும் அடுத்த கட்டமாக சீனா ஜெர்மன் மற்றும் ஐரோப்பிய நாடுகளை சேர்ந்த சுற்றுலாப்பிரயாணிகள் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.