சுற்றுலா விடுதியில் இருந்து ஒருவர் சடலமாக மீட்பு

0
22

ஹட்டன் கொட்டகலை கொமர்ஷல் பகுதியில் உள்ள சுற்றுலா விடுதியின் ஒன்றின் அறையில் இருந்து ஆண் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

கொழும்பு பகுதியைச் சேர்ந்த 60 வயதுடைய ரியான்சி பிள்ளை என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்தவர் சுற்றுலா இடங்களை கண்டு களிக்க வந்த நிலையில், நேற்று முன்தினம் (05) மதியம் குறித்த சுற்றுலா விடுதியில் தனது நண்பருடன் மது அருந்திவிட்டு விடுதியில் கிழே விழுந்து கிடந்துள்ளார்.

பின்னர், கீழே விழுந்த நபரை மீண்டும் அறைக்கு கூடிச் சென்றுள்ளனர். எனினும், இன்று காலை குறித்த நபர் வெளியில் வரவில்லை என்பதால், விடுதி ஊழியர் ஒருவர் இது குறித்து திம்புள்ள பத்தனை பொலிஸாருக்கு அறிவித்துள்ளனர். பின்னர் பொலிஸார் மேற்படி விடுதிக்கு வந்து அந்த நபர் அறைக்குள் உயிரிழந்ததைக் கண்டுள்ளனர்.

உயிரிழந்தவரின் சடலம் தொடர்பான நீதவான் விசாரணை (06) மதியம் நடைபெற்றதோடு, சடலம் ஹட்டன் டிக்கோயா ஆதார வைத்தியசாலையில் சட்ட வைத்திய அதிகாரியிடம் அனுப்புமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here