இன்போசிஸ் பொறியியலாளர் சுவாதி கொலை வழக்கில், ஒவ்வொரு நாளும் முன்னுக்குப் பின் முரணான தகவல்கள் வந்த வண்ணம் உள்ளன.
ராம்குமாரை சிறையில் சென்று பார்த்த வழக்கறிஞர் தரப்பு, கொலை நடந்த சமயம் தான் மேன்சனில் இருந்ததாக ராம்குமார் தங்களிடம் தெரிவித்ததாக செய்தியாளர்களிடம் சில தினங்களுக்கு முன்பு தெரிவித்திருந்தது.
இந்நிலையில், கடந்த மூன்று நாட்களாக ராம்குமாரை காவல்துறை விசாரணை செய்து வருகின்றது.
அவ்விசாரணையில் ராம்குமார் கூறியதாக தற்போது வெளிவரும் தகவல் என்னவென்றால், தான் காதலை வெளிப்படுத்தியபோது, தன்னை தேவாங்கு என்று சுவாதி திட்டியதாகவும், அதனால் மிகவும் ஆத்திரமடைந்து இந்தச் செயலை தான் செய்துவிட்டதாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும், சுவாதியைக் கொலை செய்துவிட்டு மேன்சனுக்குச் சென்ற பின் இரத்தக் கறை படிந்த சட்டையை அங்கே வைத்துவிட்டு வந்துவிட்டதாகவும், அதன் மூலமாக தான் காவல்துறையிடம் சிக்கிக் கொண்டதாகவும் ராம்குமார் தெரிவித்துள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.