சூரியனுக்கு நன்றி தெரிவித்து நுவரெலியாவில் பொங்கல் விழாவை கொண்டாடினார் சஜித் பிரேமதாச!

0
175

மலையக பாரம்பரிய கலை, கலாசார நிகழ்வுகளுடன் தொழிலாளர் தேசிய சங்கத்தின் ஏற்பாட்டில் 16.01.2022 அன்று நுவரெலியா சினிசிட்டா மைதானத்தில் ஆண்டுக்கான தைப்பொங்கல் விழா வெகுவிமரிசையாக கொண்டாடப்பட்டது.

தொழிலாளர் தேசிய சங்கம் மற்றும் தொழிலாளர் தேசிய முன்னணியின் தலைவரும், நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான பழனி திகாம்பரத்தின் தலைமையில் இந்த தைப்பொங்கல் விழா நடைபெற்றது.
இவ்விழாவில் ஆரம்ப நிகழ்வாக சூரியனுக்கு நன்றி செலுத்துவதற்காக எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச சூரியப்பொங்கல் பொங்கி விழாவை ஆரம்பித்து வைத்தார்.

இதனைத்தொடர்ந்து விசேட அம்சமாக வரவேற்பு நடனம், மற்றும் மலையகப் பாரம்பரிய கலை, கலாசார நிகழ்ச்சிகளும் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் வரவேற்புரையை பாராளுமன்ற உறுப்பினர் எம்.உதயகுமார் உரையாற்றியதோடு, எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச, இலங்கைக்கான இந்தியத் தூதுவர் கோபால் பாக்லே, கண்டிக்கான இந்திய உதவி தூதுவர் திருமதி.ஆதிரா, பாராளுமன்ற உறுப்பினர்களான பழனி திகாம்பரம், இராதாகிருஷ்ணன், வேலுகுமார், வடிவேல் சுரேஷ், தமிழ் முற்போக்கு கூட்டணியின் செயலாளர் சந்திர சாப்டர் மற்றும் முன்னாள் மத்திய மாகாண சபை உறுப்பினர்களான சோ.ஸ்ரீதரன், சரஸ்வரதி சிவகுரு, முத்தையா ராம் கட்சி முக்கியஸ்தர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

(க.கிஷாந்தன்)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here