சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் முழுவதும் சூரிய சக்தியில் இயங்கும் ஆற்றலைப் பெற்றிருப்பதற்கு பிரதமர் மோடி மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.
நாட்டின் மிக முக்கியமான ரயில் நிலையத்தில் ஒன்றான சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம், சூரிய மின் சக்தி உற்பத்தியில் தன்னிறைவு அடைந்துள்ளது.
இந்த ரயில் நிலையத்தில் உள்ள நடைமேடைகள், தங்குமிடங்களில் நிறுவப்பட்ட சூரிய தகடுகள் மூலம் 100 சதவீத மின் ஆற்றல் தேவை இலக்கு எட்டப்பட்டுள்ளது. இத்தகவலை ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார்.
மத்திய ரயில்வே,அஷ்வினி வைஷ்ணவ் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவுக்கு பதிலளித்துள்ள பிரதமர், “சூரிய சக்திக்கான பாதையை புரட்சித் தலைவர் டாக்டர் எம் ஜி ராமச்சந்திரன் சென்ட்ரல் ரயில் நிலையம் வகுத்து தந்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது”என்று கூறியுள்ளார்.