சூர்யாவின் நடிப்பில் வெளியான ’24’ திரைப்படம் 18 நாட்களில் 100 கோடியை வசூலித்து சாதனை படைத்திருகிறது. கடந்த மே 6-ஆம் தேதி சூர்யா-சமந்தா மற்றும் பலர் நடிப்பில் வெளியான படம் ’24’. விக்ரம் குமார் இயக்கத்தில் வெளியானது.
இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்திருந்தார். உலகம் முழுவதும் சுமார் 1500 திரையரங்குகளில் இப்படம் வெளியானது.
சூர்யாவின் 2டி என்டெர்டெயின்மெண்ட் நிறுவனம் இப்படத்தை 70 கோடி என்ற மிகப்பெரிய பட்ஜெட்டில் தயாரிக்க, உலகம் முழுவதும் ஸ்டுடியோ கிரீன் மற்றும் ஈரோஸ் நிறுவனம் வாங்கி வெளியிட்டது.
முதன் முறையாக 3 வேடங்களில் சூர்யா இப்படத்தில் நடித்திருந்தார். வேறு பெரிய படங்கள் இல்லாத நிலையில் வெளியான ’24’ முதல் வாரத்தில் உலகம் முழுவதும் 55 கோடிகளை வசூலித்தது.
இந்தியா தவிர அமெரிக்கா, கனடா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட வெளிநாடுகளிலும் இப்படம் நல்ல வரவேற்பைப் பெற்றது. வெளிநாடுகளில் இப்படத்திற்கான வரவேற்பு இன்னும் குறையவில்லை.
குறிப்பாக அமெரிக்காவில் 10 கோடிகள் வரை இப்படம் வசூல் செய்திருக்கிறது. இதனால் படக்குழுவினர் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர்.
3 வாரங்கள் முடிவில் இப்படம் 100 கோடிகளை வசூலித்து சாதனை படைத்துள்ளது. இதனால் வில்லன், தயாரிப்பாளர், நடிகன் என்று மூன்றிலுமே சூர்யா வெற்றிக்கொடி நாட்டியிருக்கிறார்.
இதுதவிர ‘அஞ்சான்’, ‘மாசு’ போன்ற தோல்விகளிலிருந்தும் சூர்யா தற்போது மீண்டுள்ளது குறிப்பிடத்தக்கது. சூர்யா நடித்து வரும் ‘எஸ் 3’ செப்டம்பர் மாதம் திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.