சூழலை நேசிப்போம் எனும் தொணியில் அக்கரப்பத்தனை பிரதேசசபையின் ஏற்பாட்டில் பொது மக்கள் நகர வர்த்தகர்கள் மற்றும் சாரதி சங்கத்தினர் இணைந்து அக்கரப்பத்தனை நகரில் சிரமதான பணியை (28) சனிக்கிழமை முன்னெடுத்தனர்.
இதில் நூறுக்கும் அதிகமானவர்கள் கலந்துகொண்டு சிரமதான பணியை முன்னெடுத்தனர்.
இதன் போது அக்கரப்பத்தனை நகரின் கடைவீதிகளில் அடைப்பு காண்கள் வீட்டு தொகுதியின் வளாகங்கள் குறுக்கு மற்றும் பிரதான வீதி களும் சுத்தம் செய்யப்பட்டது. இந்த சிரமதான பணி அக்கரப்பத்தனை பிரதேச சபை தவிசாளர் எஸ்.கதிர்செல்வனின்
வழிகாட்டுதலில் இடம்பெற்றதென்பது குறிப்பிடத்தக்கது.
அக்கரப்பத்தனை நிருபர்



