அட்டன் கொழும்பு பிரதான வீதியின் அம்பகமுவயில் இருந்து கொட்டகலை பகுதியை நோக்கி பயணித்த தனியார் நிறுவனம் ஒன்றுக்கு சொந்தமான கெப்வாகனம் ஒன்றும் அட்டனில் இருந்து கண்டி பகுதியை நோக்கி பயணித்த வியாபாரத்திற்கான பொருட்களை ஏற்றிச்சென்ற லொறி ஒன்று நேருக்கு நேர் மோதி அட்டன் செனன் பகுதியில் விபத்துக்குள்ளாகியதாக அட்டன் பொலிஸார் தெரிவித்தனர் .இந்த விபத்து 09.05.2018. புதன்கிழமை மாலை 05.15மணி அளவில் இடம் பெற்றதாக அட்டன் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
அம்பகமுவயில் இருந்து கொட்டகலை நோக்கி பயணித்த கெப்வாகனத்தில் இயந்திர கோளாறு காரணமாக ஏற்பட்ட விபத்தில் லொறிக்கும் கெப்வாகனத்திற்கு பலத்த சேதங்கள் ஏற்பட்டுள்ளதாக அட்டன் பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரனைகளில் தெரியவந்துள்ளது .
இதேவேலை அதிக வேகத்தின் காரணமாகவே இயந்திர கோளாறு ஏற்பட்டிருக்கலாமென பொலிஸார் சந்தேக்கின்றனர்.
குறித்த விபத்து தொடர்பில் எவருக்கும் எவ்வித காயங்களும் ஏற்பட வில்லையெனவும் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரனைகளை அட்டன் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடதக்கது.
பொகவந்தலாவ நிருபர் .எஸ்.சதீஸ்