சென்னை அணியின் இம்பேக்ட் வீரர்கள் இவர்கள்தான்..!

0
178

ஐபிஎல் தொடரில் இம்முறை பல சுவாரஸ்யத்தை பிசிசிஐ வெளியிட்டு இருக்கிறது. அதில் முக்கியமான ஒன்று இந்த இம்பேக்ட் பிளேயர் விதிமுறை. இதன் மூலம் ஐபிஎல் தொடரின் வடிவமே தலைகீழாக மாற வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது.

ஆடுகளம் திடீரென்று சுழற்பந்துவீச்சுக்கு சாதகமாக மாறினாலும், இல்லை எதிரணி வேகப்பந்துவீச்சை சமாளிக்க திணறினாலும், நாம் ஆட்டத்தின் எந்த நேரத்திலும் இந்த இம்பேக்ட் வீரர்கள் விதியை பயன்படுத்தி கொள்ளலாம்.

இதே போன்று துடுப்பாட்ட வீரர்கள் சீக்கிரம் ஆட்டமிழந்துவிட்டார்கள். இதனால் கைவசம் எந்த வீரரும் இல்லை என்றால், கடைசி நேரத்தில் இம்பேக்ட் பிளேயர் விதியை பயன்படுத்தி நாம் ஒரு வீரரை களமிறக்க முடியும்.

எனினும் அணியின் பதினொருவர் அடங்கிய குழாமில் 4 வெளிநாட்டு வீரர்கள் இருந்தால், இம்பேக்ட் வீரராக இந்திய வீரர்களை தான் பயன்படுத்த முடியும்.

இதற்கமைய சென்னை அணியில் உள்ள இம்பேக்ட் பிளேயர்ஸ் யார் என்பதை தற்போது பார்க்கலாம்.

குட்டி ஹர்திக் பாண்டியா என்று ரசிகர்களால் அழைக்கப்படும் ராஜவர்த்தன் ஹங்கர்கேகரை சிஎஸ்கே பயன்படுத்தலாம் என எதிர்பார்க்கபடுகிறது.

அதிரடி துடுப்பெடுத்தாட வீரராக விளங்க கூடிய ஹங்கர்கேகர், கீழ்வரிசையில் இமாலய 6 ஓட்டங்களை அடிக்க கூடியவர் என கூறப்படுகிறது.

இதே போன்று பந்துவீச்சிலும் அதிவேகமாக செயல்படும் ஒரு வீரர் ஆவர்.

சிஎஸ்கே அணியில் இடம்பெற்றுள்ள சிவம் துபேவும் இம்பேக்ட் பிளேயராக தோனி பயன்படுத்த வாய்ப்பு காணப்படும்.

கடந்த தொடரில் கூட சிவம் துபே தனது திறமையை பயன்படுத்தி இருக்கிறார். இதனால் சிஎஸ்கே அணிக்கு துடுப்பாட்டத்தில் சிக்கல் எழுந்தால், நிச்சயம் சிவம் துபே நல்ல தெரிவாக இருப்பார்.

இதே போன்று 19 வயதுக்குட்பட்ட வீரர் நிஷாந்த் சிந்துவும் இம்பேக்ட் பிளேயராக தனது திறமையை நிரூபிக்க கூடியவர்.

அடுத்த ஜடேஜாவாக நிஷாந்த் சிந்து வர அதிகம் வாய்ப்பு காணப்படுகிறது.துடுப்பாட்டத்திலும், சுழற்பந்துவீச்சிலும் சிறப்பாக செயல்பட கூடிய கூடிய நிஷாந்த் சிந்து தோனிக்கு துருப்புச் சீட்டு என அழைக்கப்படுகிறார்.

இந்த பட்டியலில் இடம்பிடித்து இருக்கும் ஆச்சரியத்தை அளிக்கும் வீரர் ரஹானே தான்.

சென்னை ஆடுகளம் சுழற்பந்துவீச்சுக்கு சாதகமாக இருக்கும். அப்போது ஆட்டமிழப்புக்கள் உடனடியாக விழுந்தால், அதனை தனது அனுபவம் மூலம் எதிர்கொள்ள ரஹானே நல்ல தெரிவாக இருப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here