நேற்று (04) சென்னை விமான நிலையத்துக்கு வர வேண்டிய விமானங்கள், புறப்பட வேண்டிய விமானங்கள் என 150க்கும் மேற்பட்ட விமான சேவைகள் இரத்து செய்யப்பட்டு விமான நிலையம் மூடப்பட்டது.
சென்னை விமான நிலையத்தில் சேவைகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.கனமழை காரணமாக சென்னை விமான நிலையம் நேற்று (4) மூடப்பட்டது.
விமான ஓடுபாதையில் இரண்டு அடி அளவிற்கு வெள்ள நீர் தேங்கியதால் நேற்று (4) இரவு 11 மணி வரை மூடப்படும் என அறிவிக்கப்பட்டது .அதன்பின் சூழ்நிலைக்கு ஏற்ப முடிவு எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.
மழையின் தாக்கம் குறையாததால் இன்று காலை வரை விமான நிலையம் இயங்காது என அறிவிக்கப்பட்டது.இந்நிலையில் தற்போது மழை வெள்ளம் குறைவடைய ஆரம்பித்துள்ளது.
சென்னையில் இருந்து மிக்ஜாம் புயல் நகர்ந்து ஆந்திராவுக்குள் நுழைந்துவிட்டதாகவும் , ஆந்திராவில் இன்று மிக்ஜாம் புயல் கரையை கடக்க உள்ளதாகவும் வானிலை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதனால் சென்னை விமான நிலையத்தில் 9 மணியில் இருந்து விமான சேவைகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டன .விமான சேவை ஆரம்பிக்கப்பட்டாலும் , குறைந்த அளவிலான விமானங்களே இயக்கப்பட்டன .
மேலும், சென்னைக்கு வர வேண்டிய 88 விமானங்களும் சென்னையில் இருந்து புறப்பட வேண்டிய 89 விமானங்களுமாக மொத்தம் 177 விமான சேவைகள் இன்று இரத்து செய்யப்படவுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன