தலவாக்கலை – சென்.கூம்ஸ் தோட்டத்தில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட மக்களின் சுகாதார நலன் கருதி ஒருதொகை முகக்கவசங்கள் வழங்கி வைக்கப்பட்டது.
தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவர் பழனி திகாம்பரம் அவரின் ஆலோசனையில் தொழிலாளர் தேசிய சங்கத்தின் பிரதித் தலைவர் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் மயில்வாகனம் உதயகுமார் அவர்களின் தலைமையில் இன்று 5 ஆயிரம் முகக்கவசங்கள் தோட்ட முகாமையாளரிடம் கையளிக்கப்பட்டது.
மேலும் தனிமைப்படுத்தப்பட்டுள்ள குறித்த தோட்டத்தில் மக்களுக்கு காணப்படும் குறைப்பாடுகள் குறித்து தோட்ட முகாமையாளர் பாராளுமன்ற உறுப்பினர் மயில்வாகனம் உதயகுமார் அவர்களின் கவனத்திற்கு கொண்டுவந்தார்.
அது குறித்து உரிய தரப்புடன் பேசி நடவடிக்கை எடுக்கப்படும் என பாராளுமன்ற உறுப்பினர் மயில்வாகனம் உதயகுமார் உறுதி அளித்தார்.