செம்மணி மனித புதைகுழியில் இதுவரை 45 மனித எலும்புக் கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் புதிதாக அகழப்படும் புதைகுழியிலும் மண்டையோடொன்று அவதானிக்கப்பட்டுள்ளது.
செய்மதி படங்களின் அடிப்படையில் புதிதாக என்பு கூடுகள் இருக்கலாம் என்ற சந்தேகத்தில் தோண்டப்பட்ட இடத்திலலேயே இந்த மண்டையோடு அடையாளம் காணப்பட்டுள்ளது.
இதேவேளை இதுவரை மொத்தமாக 45 மனித எலும்புக் கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் 42 மனித எலும்புக் கூடுகள் அகழ்ந்தெடுக்கப்பட்டிருக்கின்றன.
இதேவேளை புதிதாக நேற்று மூன்று எலும்புக்கூடுகள் அடையாளப்படுத்தப்பட்டதோடு ஏற்கனவே தோண்டப்பட்ட பகுதியில் 5 எலும்பு கூட்டு தொகுதிகள் முற்றாக அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளன.