செய்தி சேகரிக்கசென்ற ஊடகங்களுக்கு உள்நுளைவதற்கு அனுமதி மறுத்த அம்பகமுவ பிரதேசசபை!!

0
184

அம்பகமுவ பிரதேசசபையின் கொடுப்புணவூ அறிக்கையை சபையில் சமர்பிக்காமைக்கு அம்பகமுவ பிரதேசசபையில் எதிர்ப்பு நடவடிக்கையை செய்தி சேகரிக்கசென்ற ஊடகங்களுக்கு அம்பகமுவ பிரதேசசபையின் உள்நுளைவதற்கு அனுமதி மறுப்பு

அம்பகமுவ பிரதேசசபையின் மாதாந்த அமர்வு 23.08.2018.வியாழகிழமை காலை 09மணிக்கு அம்பகமுவ பிரதேசசபையின் தவிசாளர் ஜயசங்க பெரேரா தலைமையில் இடம் பெற்றது.

இதன்போது ஸ்ரீலங்க பொதுஜன பெரமுன கட்சியினை சார்ந்த அம்பகமுவ பிரதேசசபையின் உறுப்பினர் எலப்பிரிய நந்தராஜா சபை அமர்வின் போது அம்பகமுவ பிரதேச சபையின் கொடுப்பணவு தொடர்பான அறிக்கை புதியசபை அமைக்கபட்ட காலபகுதியில் இருந்து சபை அமர்வுகளின் போது சமர்பிக்கபடாமை தொடர்பில் சபை அமர்வின்போது கறுப்பு பட்டி அணிந்து எதிர்ப்பினை வெளிபடுத்தினார்.

இதன் போது அம்பகமுவ பிரதேசசபையில் எதிர்பினை வெளிபடுத்திய ஸ்ரீலங்க பொதுஜன பெரமுன கட்சியின் உறுப்பினரும் அம்பகமுவ பிரதேசசபையின் உறுப்பினருமான எலப்பிரிய நந்தராஜா வெளிபடுத்திய எதிர்பினை செய்தி சேரிக்கசென்ற சில ஊடகவியலாளர்களுக்கு அம்பகமுவ பிரதேசசபையின் உள் செல்ல தவிசாளர் ஜயசங்க பெரேரா அனுமதியினை மறுத்தார்

அம்பகமுவ பிரதேசசபையின் உறுப்பினர் எலப்பிரிய நந்தராஜா எதிர்ப்பு நடவடிக்கை காரணமாக 30நிமிடங்கள் சபைஅமர்வு இடைநிறுத்தி வைக்கட்டது. எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்ட அம்பகமுவ பிரதேசசபையின் உறுப்பினர் எலப்பரிய நந்தராஜா கருத்து தெரிவிக்கையில்……

இம் முறை நான் அம்பகமுவ பிரதேசசபையின் உறுப்பினராக தெரிவுசெய்யபட்ட காலத்தில் இருந்து இன்றைய அமர்வு வரை அம்பகமுவ பிரதேசசபையின் கொடுப்பணவு அறிக்கையை அம்பகமுவ பிரதேசசபை சபை அமர்வின் போது முன்வைப்பதில்லை இது தொடர்பாக இதற்கு முன்பும் நான் எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு இருக்கின்றேன். அதனால் தான் இன்றைய தினமும் இடம் பெற்ற சபை அமர்வின் போது கறுப்பு பட்டி அணிந்து கொண்டு சபைக்கு வெளியில் இறங்கி இந்த எதிர்ப்பு நடவடிக்ககையில் ஈடுபட்டுள்ளேன். அதுமட்டும் அல்லாது மக்களுடைய பிரச்சினைகளை பேசுவதற்கு கூட இந்த சபை அமர்வின் போது எனக்கு அனுமதி வழங்குவதில்லை மக்களுடைய பணத்தை தான் பிரதேசசபைகளில் செலவிடுகின்றனர் மக்களுடைய பணத்தினை பிரதேசசபை செலவிடுகின்றபோது மக்கள் தெரிந்து கொள்ளவேண்டும் இந்த பணத்தினை எதற்காக எந்தமுறையில் செலவு செய்கிறார்கள் என்று இங்கு செலவு செய்யும் பணத்தை யாரும் அவர்களுடைய வீட்டில் இருந்து கொண்டு வரவில்லை ஆகையால் தான் கூறுகிறேன் மக்களுடைய பணம் எவ்வாறு செலவு செய்யபடுகின்றது என்பதனை மக்கள் புரிந்து கொள்ளவேண்டுமெனவும் தெரிவித்தார்.

இதேவேலை நான் மக்களுக்கு இன்றைய சபை அமர்வின் போது எதிர்பினை வெளிபடுத்திய போது அந்த எதிர்ப்பு நடவடிக்கையினை ஒளிபதிவு செய்யவந்த ஒரு சில ஊடகங்களுக்கு சபை உள் நுழைவதற்கு அம்பகமுவ பிரதேசசபையின் தவிசாளர் அனுமதி வழங்கவில்லை. நான் ஒன்றை கேட்கின்றேன் இதுவா நல்லாட்சி அரசாங்கம் மக்களுடைய பிரச்சினைகளை சபை அமர்வின் போது எங்களுக்கு பேசுவதற்கு அனுமதி வழங்காமல் இருப்பதா இந்த நாட்டின் ஜனநாயகம் எனவும் குறிப்பிட்டார்.

 

 

எஸ் . சதீஸ்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here