மின்சார சபையினால் வெளியிடப்பட்டுள்ள கடிதத்தில், செலுத்தப்படாத மின்கட்டணம் தொடர்பில் நாமல் ராஜபக்ஷ சார்பில் கடிதம் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.
12-09-2019 முதல் 15-09-2019 வரை ஹம்பாந்தோட்டை வீரகெடிய இல்லத்தில் நடைபெறும் வைபவம் ஒன்றிற்காக பாதுகாப்பு விளக்குகளை பொருத்துமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கோரிக்கைக்கு இணங்க தற்காலிகமாக மின்சாரம் வழங்கப்பட்டு, பாதுகாப்பு விளக்குகள் பொருத்தப்பட்டு, மின்சாரம் வழங்கப்பட்ட பின்னர் உபகரணங்களும் அகற்றப்பட்டுள்ளன.
இதனால் பாதுகாப்பு விளக்குகள் பொருத்துவதற்கும், ஜெனரேட்டர் விநியோகத்திற்கும் மின்சார சபைக்கு 2,682,246.57 ரூபாய் செலவு செய்ய வேண்டி ஏற்பட்டது.
ஆனால் இதுவரை அந்தத் தொகை வழங்கப்படவில்லை என்று மின்சார சபை குறிப்பிட்டுள்ளது.
இலங்கை மின்சார சபையினால் வழங்கப்பட்ட கடிதம் தொடர்பில் மின்கட்டணம் சமர்ப்பிக்கப்பட்டிருந்தால், அது யாருடைய பெயரில், எந்த முகவரிக்கு அனுப்பப்பட்டுள்ளது எனவும், அந்த பில்லில் சரியான தகவல்களை வழங்குமாறும் பதில் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.