சைபர் குற்றத்திற்கு எதிரான ஐ.நா. பிரகடனத்தில் இலங்கை கைச்சாத்து!

0
30

சைபர் குற்றத்திற்கு எதிரான ஐ.நா. பிரகடனத்தில் இலங்கையும் கைச்சாத்திட்டுள்ளது.

வியட்நாமில் நடைபெற்ற மாநாட்டிலேயே இதற்குரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

வெளிவிவகார அமைச்சு, நீதி அமைச்சுடன் இணைந்து டிஜிட்டல் பொருளாதார அமைச்சு சமர்ப்பித்த கூட்டு முன்மொழிவுக்கு அமைச்சரவை அண்மையில் அங்கீகாரம் அளித்திருந்தது.

இதற்கமையவே மேற்படி பிரகடனத்தில் கைச்சாத்திடப்பட்டுள்ளது.
ஐ.நா. பொதுச்செயலர் அன்டோனியோ குட்டெரெஸ் மற்றும் வியட்நாமின் தலைவர் லுவாங் குவோங் ஆகியோர் கலந்து கொண்ட நிகழ்வில், 72 ஐ.நா. உறுப்பு நாடுகளும் ஐரோப்பிய ஒன்றியமும் இந்தப் பிரகடனத்தில் கையெழுத்திட்டன.

இந்த நிகழ்வில் 111 உறுப்பு நாடுகளை பிரதிநிதித்துவப்படுத்தும் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.இலங்கை அரசாங்கத்தின் சார்பாக டிஜிட்டல் பொருளாதார அமைச்சின் பதில் செயலாளர் வருண சிறி தனபால இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here