சொந்தமாக நாடும் இல்லை.. வீடும் இல்லை! – அகதிகளாக 80 மில்லியன் மக்கள்!

0
175

உலகம் முழுவதும் சொந்த நாடு, வீடுகளை இழந்து நாடு நாடாக அலையும் மக்களின் துயரங்களை எடுத்துக் கூறும் விதமாக உலக அகதிகள் தினம் இன்று கொண்டாட்டப்படுகிறது.

உலகம் முழுவதும் தொழில்நுட்பம், கலாச்சாரம் வளர்ந்துவிட்ட சூழலில் போர், இனவெறுப்பு போன்றவையும் தொடர்ந்து கொண்டே இருக்கின்றன. போர், இனவெறுப்பு மற்றும் இன்ன பிற காரணங்களால் உலக நாடுகள் பலவற்றிலிருந்து மக்கள் பலர் அகதிகளாய் வெளியேறும் அவலம் தொடர்ந்து வருகிறது.

கடந்த 20 ஆண்டுகளில், அதாவது இந்த நூற்றாண்டு தொடங்கியது முதலாக இலங்கை தமிழ் ஈழ அகதிகள், சிரியா உள்நாட்டு போரால் அகதிகளானவர்கள், மியான்மரில் ரொஹிங்கியா முஸ்லீம் மக்கள், அமெரிக்காவில் புகும் மெக்ஸிகோ அகதிகள் என லட்சக்கணக்கானோர் அகதிகளாகியுள்ளனர். சொந்த நாடின்றி, வீடின்றி பல நாடுகளில் அடைக்கலம் புகுந்துள்ள இவர்கள் அகதிகள் என்ற அடையாளத்தோடே வாழ்ந்து வருகின்றனர். தற்போதைய கணக்குப்படி உலகம் முழுவதும் 26 மில்லியன் அகதிகள் வெவ்வேறு நாடுகளில் தஞ்சம் அடைந்துள்ளனர். இதுதவிர உள்நாட்டுக்குள்ளேயே சுயத்தை இழந்து அகதிகளாக வாழும் மக்கள் சுமார் 80 மில்லியன் என United Nations High Commissioner for Refugees தெரிவித்துள்ளது.

இந்நிலையில் அகதிகளாக குடிபெயர்வோருக்கு நிலையான வாழ்வாதாரத்தை ஏற்படுத்தி தருதல், அவர்களுக்கான அங்கீகாரம் கிடைக்க செய்தல் போன்றவற்றிற்கு பலரும் தொடர்ந்து குரல் கொடுத்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here