சௌபாக்கியம் நிரம்பப்பெற்ற ஆண்டாக புத்தாண்டு மலரட்டும் – ரிஷி செந்தில்ராஜ்!

0
152

சௌபாக்கியம்  நிரம்பப்பெற்ற ஆண்டாக இந்த புத்தாண்டு மலரட்டும் என மலையக தேசியக முன்னணியின் தலைவரும், கூட்டுஎதிர்க்கட்சியின் தமிழ்ப் பிரிவு பொறுப்பாளருமான கலாநிதி ரிஷி செந்தில்ராஜ் தெரிவித்துள்ளார்.
புத்தாண்டை முன்னிட்டு வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
அவர் தனது வாழ்த்துச் செய்தியில்…..
மலர்ந்துள்ள புத்தாண்டு மலையகப் பெருந்தோட்ட தோழமைகளுக்கும் ஏனைய உலக வாழ் மக்களுக்கும் சௌபாக்கியமும், சுபீட்சமும்செலுமையாக நிரம்பி வழியும் ஆனந்த ஆண்டாக அமையட்டும்.
மலையக பெருந்தோட்ட வாழ் தோழமைகளின் வாழ்;வாதாரப் பிரச்சினைகளுக்கு தீர்வு காணக்கூடிய திட சங்கற்பத்துடன் இந்த ஆண்டைஎதிர்நோக்குவோம்.
மக்கள் மத்தியில் பரஸ்பர புரிந்துணர்வும் சமாதானமும் அமைதியும் மகிழ்ச்சியும் பல்கிப் பெருகிடக்கூடிய வகையில் இந்த புத்தாண்டு அமையஇஸ்ட தெய்வங்கள் அருள் பாலிக்கட்டும்.
மலர்ந்துள்ள இந்த ஆண்டில் எமது அரசியல், பொருளாதார, கலாச்சார, பண்பாட்டு உரிமைகளை உறுதி செய்யக்கூடிய வகையில் மலையகப்பெருந்தோட்ட உடன்பிறப்புக்கள் மதிநுட்பமான தீர்மானங்களை எடுக்க வேண்டியது அவர் தம் தார்மீகப் பொறுப்பு என கலாநிதி ரிஷிசெந்திராஜ் தனது வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
மலர்ந்துள்ள இந்த ஆண்டு எமது உடன்பிறப்புக்கள் தங்களை தாங்களே ஆளக்கூடிய அரிய சந்தர்ப்பம் கிடைத்துள்ளது எனவும் அந்தபொன்னான சந்தர்ப்பத்தை சரியான முறையில் பயன்படுத்தி இந்த ஆண்டை ஜெயம் மிக்க ஆண்டாக மாற்றி வரலாற்று சாதனை படைப்பதற்குஅனைவரினதும் ஒத்துழைப்பு இன்றியமையாது என அவர் மேலும் தெரிவித்துள்ளார்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here