சௌமிய மூர்த்தி தொண்டமானின் 105வது ஜனன தினத்தினை முன்னிட்டு கலாச்சார மண்டபம் மற்றும் தேசிய உணவு உற்பத்தி நிலையத்திற்கான அடிகல் நாட்டு விழாவும்
இலங்கை தொழிலாளர் காங்ரசின் ஸ்தாபக தலைவர் சௌமிய மூர்த்தி தொண்டமானுடைய 105வது ஜனனதின விழா 30.08.2018.வியாழக்கிழமை அனுஸ்டிக்கபட்டது. இதன் போது இன்று மலையகத்தில் பல்வேறு நிகழ்வுகள் இடம் பெற்றன இதன் போது இலங்கை தொழிலாளர் காங்ரசின் தலைவரும் பொதுச்செயலாளரும் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான ஆறுமுகன் தொண்டமான் தலைமையில் வட்டவலை பகுதியில் அமைக்கபட்ட கலாச்சார மண்டபம் ஒன்று உத்தியோக பூர்வமாகதிறந்து வைக்கபட்டு மக்களின் பாவனைக்கு கையளிக்கபட்டது.
இதேவேலை நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஆறுமுகன் தொண்டமான் அவர்களின் பணிப்புரைக்கமைய மத்திய மாகாண இந்து கலாச்சார தோட்ட உட்கட்டமைப்பு மற்றும் மத்திய மாகாண தமிழ் கல்வி அமைச்சின் 40இலட்ச்சம் ரூபா நிதி ஒதுக்கிட்டில் கொட்டகலை நகரில் தேசிய உணவு உற்பத்தி நிலையத்திற்கான அடிகல் நாட்டி வைக்கபட்டது
இந் நிகழ்வில் ஆறுமுகன் தொண்டமான் உட்பட கைத்தொழில் பிரதி அமைச்சர்முத்துசிவலிங்கம் மத்திய மாகாண அமைசச்ர் எம்.இராமேஸ்வரன் ஊவாமாகாண அமைச்சர் செந்தில் தொண்டமான் முன்னால் பாராளுமன்ற உறுப்பினர் பி.இராஜதுரை மத்திய மாகாணசபை உறுப்பினர்கள் பிரதேசசபை தலைவர்கள் பிரதேசசபை உறுப்பினர்கள் மற்றும் பலரும் கலந்து கொண்டமை குறிப்பிடதக்கது.
(பொகவந்தலாவ நிருபர்.எஸ்.சதீஸ்)