லங்கா பிரிமீயர் லீக் தொடரில் கொழும்பு ஸ்டார்ஸ் அணிக்கு எதிரான நேற்றைய போட்டியில் ஜஃப்னா கிங்ஸ் அணி 93 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது.
போட்டியின் நாணய சுழற்சியில் வென்ற கொழும்பு ஸ்டார்ஸ் அணி களத்தடுப்பை தேர்வு செய்தது.
சீரற்ற வானிலை காரணமாக போட்டி 18 ஓவர்களாக மட்டுப்படுத்தப்பட்டது.
போட்டியின் முதலில் துடுப்பாடிய ஜஃப்னா கிங்ஸ் அணி 6 விக்கெட்டுக்களை இழந்து 207 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது.
தொடர்ந்து 208 என்ற வெற்றியிலக்கை நோக்கி பதிலளித்தாடிய கொழும்பு ஸ்டார்ஸ் அணி 15.5 ஓவர்கள் நிறைவில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 114 ஓட்டங்களை மாத்திரம் பெற்று தோல்வியை தழுவியது.