ஜனநாயகம் மற்றும் தேர்களின் சமகால சவால்கள் தொடர்பான கருத்தாடல் ஒன்று நேற்று முன்தினம் (01) ம் திகதி காலை முதல் மாலை வரை ஹட்டன் கிருஸ்ணபவன்; மண்டபத்தில் நடைபெற்றது.
இதில் தேர்தல்களின் முக்கியத்துவம் ஜனநாயக உரிமைகள்,வாக்களிப்பதன் அவசியம் மக்களின் தேவைகள் மக்கள் பிரதிநிதிகளின் கடமைகள் மற்றும் பொறுப்புகள் ஒரு ஜனநாயக நாட்டில் காணப்பட வேண்டிய பண்புகள்; உள்ளிட்ட விடயங்கள் இதன் போது பொது மக்களுக்கு தெளிவு படுத்தப்பட்டதுடன் அண்மைக் காலமாக எமது நாட்டில் தேர்தல்கள் பிற்போடப்பட்டுவருவது மக்களின் உரிமைகளுக்கு ஏற்படும் பாதிப்புக்கள் உள்ளிட்ட விடயங்களுகம் மக்கள் பிரதிகளை தெரிவு செய்யும் போது மக்கள் கவனத்தில் கொள்ள வேண்டிய விடயங்கள் தொடர்பாகவும் இதன் போது தெளிவூட்டப்பட்டன.
அதனை தொடர்ந்து மக்களை ஜனநாயக உரிமைகள் மற்றும் சமகல தேர்தல்களின் சவால்கள்; தொடர்பாக தெளிவூட்டும் துண்டுபிரசுரங்கள்;,ஹட்டன் பஸ்தரிப்பு நிலையம் மற்றும் கடைகளுக்கு பெற்றுக் கொடுக்கப்பட்டன.
இந்த துண்டுபிரசுரம் பெற்றுக்கொடுப்பதற்கு சுமார் 50 இற்கும் மேற்பட்டவர்கள் கலந்;த கொண்டிருந்தனர்.
இது குறித்த அதன் பின் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது அந்;நிலையத்தின் பணிப்பாளர் ஏ.எம். விக்டர் கருத்து தெரிவிக்கையில்…
பொறுப்புள்ள கண்காணப்பு நிலையம் என்ற வகையில் ஜனநாயகத்திற்கு எதிரான அல்லது சவாலான விடயங்கள் தொடர்பான கலந்துரையாடல் ஒன்று தான் இன்று இடம்பெற்றுள்ளது.
இதில் நாங்கள் இலங்கையில் தேர்தல் காணாமல் செய்யப்படுகின்ற ஒரு நிலைமை காணப்படுகின்றது.எந்த தேர்தல் எடுத்து பிற்போடும் ஒரு கலாசாரம் உருவாகியுள்ளது இந்த வருடம் எடுத்துக்கொண்டால் இது ஒரு தேர்தல் ஆண்டாகத்தான் காணப்படுகின்றது. தற்போது மக்களின் ஆணையினை இழந்த ஒரு ஜனாதிபதியும் பாராளுமன்றம் இருப்பதாக மக்;கள் கருதுகின்றனர். எனவே எனவே இந்த ஆண்டு ஜனாதிபதி தேர்தலோ அல்லது பாராளுமன்ற தேர்தலோ நடைபெற வேண்டும்.
ஆகவே மக்களின் ஜனநாயக உரியினை மக்;கள் கேட்க வேண்டும் என்பதனை நாங்கள் நாடு பூராகவும் தெளிவு படுத்தி வருகிறோம் .இந்த வருடம் தேர்தல் நடைபெறும் என்பதனையும் நாம் எதிர்பார்க்கிறோம் என தெரிவித்த அவர் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கும் பதிலளித்தார்.
இந்த நிகழ்வின் தொகுப்பினை அறிவிப்பாளர் எஸ். கலாதேவன் மேற்கொண்டார்.
இந்நிகழ்வுக்கு தேர்தல் திணைக்களத்தின் முன்னாள் பிரதி ஆணையாளர் முஹமட்,சிவசக்தி பவுண்டேசன் பணிப்பாளர் செல்வராஜ்,உட்பட பல்வேறு பிரதேசங்களைச் சேர்ந்த பொது மக்கள் கலந்து கொண்டிருந்தனர்.
மலைவாஞ்ஞன்