ஜனநாயக தொழிலாளர் காங்கிரஸின் ஸ்தாபகர் அமரர். அப்துல் அஸீஸ் அவர்களின் 28 வது சிரார்த்ததினம் 29.04.2018 அன்று அக்கரப்பத்தனை டொரிங்டன் தோட்டத்தில் மலை நாட்டு புதிய கிராமங்கள் மற்றும் உட்கட்டமைப்பு சமூக அபிவிருத்தி அமைச்சின் ஊடாக நிர்மாணிக்கப்பட்டுள்ள வீடமைப்பு திட்ட பிரதேசத்தில் அஸீஸ் மன்ற அமைப்பாளர் ஆர். ராமையா தலைமையில் நடைப்பெற்றது.இந்நிகழ்வில் அஸீஸ் மன்றத்தின் தலைவர் அஸீஸ் அஸ்ரப், நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம். திலகராஜ், பெருந்தோட்ட மனிதவள அபிவிருத்தி நிதியத்தின் தலைவர் வீ.புத்திரசிகாமணி உள்ளிட்ட உயர் அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.
புதிதாக அமைக்கப்பட்ட வீடமைப்பு திட்டப்பகுதியில் அமரர். அஸிஸ் அவர்களின் பெயர் பலகை திரை நீக்கம் செய்து வைக்கப்பட்டது.
அத்தோடு அஸீஸ் மன்றத்தின் ஊடாக டொரிங்டன் தமிழ் வித்தியாலத்திற்கு தொலைக்காட்சி பெட்டி ஒன்றும் அப் பாடசாலை மாணவர்களின் கல்வி நடவடிக்கைக்காக அப்பியாச கொப்பிகளும் வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடதக்கது.
க.கிஷாந்தன் , அக்கரபத்தனை நிருபர்