ஜனநாயக மக்கள் முன்னணியின் மறுப்பறிக்கையை ஜனநாயக இளைஞர் இணையம் வன்மையாக கண்டிக்கிறது.ஜனநாயக மக்கள் முன்னணியிலிருந்து ஜனநாயக இளைஞர் இணையம் வெளியேறியதை தொடர்ந்து ஜனநாயக மக்கள் முன்னணியானது இளைஞர் இணையத்தின் பெயரிலேயே இணையத்தின் செயற்குழுவால் இடைநிறுத்தப்பட்டுள்ள அதன் முன்னாள் செயலாளரினால் வெளியிட்டுள்ள மறுப்பறிக்கையை வன்மையாக கண்டிக்கிறது.i
“ஜனநாயக இளைஞர் இணையம்” 2013ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் அங்குரார்ப்பனம் செய்யப்பட்டது. அதன் ஸ்தாபக அமைப்புச் செயலாளராகிய ஆனந்ததாஸ் சஜீவானந்தன் தற்போது தலைவராகவும், ஸ்தாபக செயலாளர் ஜெயப்பிரகாசம் நிரோஷ்காந்த் தற்போது பிரதித் தலைவராகவும், ஸ்தாபக நிதி செயலாளர் அருணாசலம் சிவசங்கர் தற்போது அமைப்புச் செயலாளராகவும் விளங்குகின்றனர். அதன் ஸ்தாபக தலைவர் சண்முகநாதன் பிரபாகரன் ஜனநாயக மக்கள் முன்னணியின் அமைப்புச் செயலாளராக இருந்து தற்போது கட்சியின் செயல்பாடுகளிலிருந்து விலகியுள்ளார்.
இச்சமயத்தில் இணையத்தின் ஸ்தாபகர்கள் ஜனநாயக இளைஞர் இணையம் இணையத்தின் செயற்குழுவுக்கு உரித்தானது என உறுதிபடத் தெரிவிக்கின்றனர்.
மேலும், புது வருடத்தில் கூடவுள்ள செயற்குழு, பொருத்தமான புது செயலாளரைத் தேர்ந்தெடுக்கும்.
மேலும் இளைஞர் இணையத்தின் பெயிரில் வெளிவரக் கூடிய அறிக்கைகளை அதன் செயற்குழுவிடம் உறுதிப்படுத்திக் கொள்ளும்படி கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.
இப்படிக்கு,
ஜெயப்பிரகாசம் நிரோஷ்காந்த்
பிரதி தலைவர்
ஜனநாயக இளைஞர் இணையம்