ஜனவரி 15 முதல் அதிகரிக்கும் மின் கட்டணம் – வெளியாகிய கட்டண விபரம்

0
179

அமைச்சரவையின் அனுமதியின் பிரகாரம் ஜனவரி 15 ஆம் திகதி முதல் மின் கட்டணத்தை அதிகரிக்கவுள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.

அதிகரிக்கப்பட்டுள்ள மின் கட்டணம் தொடர்பிலான தரவுகளை ஒரு மாதத்திற்குள் பொது பயன்பாடுகள் ஆணைக்குழுவிடம் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என இலங்கை மின்சார சபையின் பொது முகாமையாளர், பொறியியலாளர் ரோஹான் செனவிரத்ன தெரிவித்தார்.

அமைச்சரவை வழங்கிய அனுமதியின் பிரகாரம், ஜனவரி 15 ஆம் திகதி முதல் வீட்டுப் பாவனை மின்சார அலகிற்கான நிலையான கட்டணமும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

0 -30 அலகுகளுக்கான நிலையான கட்டணம் 120 ரூபாவிலிருந்து 400 ரூபா வரை அதிகரிக்கப்பட்டுள்ளது.

31-60 அலகுகளுக்கான நிலையான கட்டணம் 240 ரூபாவிலிருந்து 550 ரூபா வரை அதிகரிக்கப்பட்டுள்ளது.

60-90 அலகுகளுக்கான நிலையான கட்டணம் 650 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

90-180 அலகுகள் வரையான நிலையான கட்டணம் 1500 ரூபாவாகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

180 அலகுகளுக்கு மேல் 1500 ரூபாவாக இருந்த நிலையான கட்டணம் 2000 ரூபா வரை அதிகரிக்கப்பட்டுள்ளது.

மத வழிபாட்டுத் தலங்களுக்கான கட்டணங்களிலும் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

மத வழிபாட்டுத் தலங்களுக்கான கட்டணம்
அலகு
கட்டணம்
அலகு 0- 30
400 ரூபா
அலகு 31 – 90
550 ரூபா
அலகு 90 -120
650 ரூபா
அலகு 120 – 180
1500 ரூபா

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here