ஜனாதிபதிக்கும் நாட்டுக்கும் நல்லாசி வேண்டி தலவாக்கலை கதிரேசன் ஆலயத்தில் விசேட பூஜை

0
185

ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஸ அவர்களின் 72 வது பிறந்த தினத்தினை முன்னிட்டு நாடளவிய ரீதியில் பல்;வேறு நிகழ்வுகள் இடம்பெற்று வருகின்றனர்.
இந்நிலையில் ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஸ அவர்களின் 72 வது பிறந்த தினத்தினை முன்னிட்டு தலவாக்கலை லிந்து நகரசபையின் பொது பெரமுனவின் உறுப்பினர்கள் மற்றும் தலவாக்கலை கதிரேசன் ஆலய பரிபாலன சபையினர் ஆகியோர் ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஸ அவர்களுக்கும் நாட்டு மக்களுக்கும் நல்லாசி வேண்டி விசேட பூஜையொன்று இன்று (20) ம் திகதி தலவாக்கலை கதிரேசன் ஆலயத்தில் நடைபெற்றது.

இதன் போது தற்போது நாட்;டில் ஏற்பட்டுள்ள கொரோனா தொற்று நீங்க வேண்டும் என்றும் அதனை கட்டுப்படுத்துவதற்கு ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஸ அவர்களுக்கும் அரசாங்கத்திற்கும் தையிரியம்,திடகாத்திரம் கிடைக்க வேண்டும் என்றும் வேண்டிக்கொண்டனர்.
தலவாக்;கலை லிந்துலை நகரசபை உறுப்பினர் பசால இமலக்க அவர்களின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த பூஜை வழிபாடுகளுக்கு தலவாக்கலை லிந்துலை நகரசபையின் தலைவர் லெச்சுமணன் பாரதிதாசன் கலந்து கொண்டு ஜனாதிபதிக்கு வாழ்த்துரை வழங்கியதுடன் நாடு மற்றும் நாட்டு மக்களும் தற்போது பீடித்துள்ள கொரோனா பிடியிலிருந்து சீக்கரம் விடுபட வேண்டும் எனவும் இதனை கட்டுப்படுத்துவற்கு ஜனாதிபதிக்கும் அரசாங்கத்திற்கும் மனவலிமை,கிடைக்க வேண்டும் எனவும் வேண்டிக்கொண்டார்.

பூஜை வழிபாடுகளை ஆலய பிரதமகுரு தேசமான்ய பிரசாந்த் சர்மா நடத்தி வைத்தார். இதன் போது ஜனாதிபதியின் பிறந்த தினத்தினை முன்னிட்டு இனிப்பு பண்டங்களும் வழங்கி வைக்கப்பட்டன.

சுகாதார சட்டதிட்டங்களுக்கு அமைவாக நடைபெற்ற இந்நிகழ்வுக்கு தலவாக்கலை லிந்துல நகரசபையின் தலைவர் லெ.பாரதிதாசன்,பொது பெரமுன உறுப்பினர்களான நாகராஜ்,பசான் இமலக்க உட்பட பொது பொரமுனவின் அங்கத்தவர்கள் கலந்து கொண்டனர்.

 

கே.சுந்தரலிங்கம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here