ஜனாதிபதியின் இராஜினாமா கடிதத்தை நாளை பெற்றுக்கொள்ளவுள்ளதாக சபாநாயகர் தெரிவிப்பு!

0
179

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் இராஜினாமா கடிதத்தை நாளை (20) பெற்றுக்கொள்ளவுள்ளதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்.

இந்த விடயம் குறித்து சிங்கள ஊடகமொன்றுக்கு தெரிவித்துள்ள ​​சபாநாயகர், பிரதமர் ரணில் விக்ரமசிங்க, நாடாளுமன்றத்தைக் கூட்டுவதற்கான எழுத்துப்பூர்வ கோரிக்கையை இதுவரை தன்னிடம் சமர்ப்பிக்கவில்லை என்று கூறியுள்ளார்.

எவ்வாறாயினும் எதிர்வரும் அரசாங்க விவகாரங்கள் மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் தொடர்பாக இன்று பிற்பகல் நடைபெறவுள்ள கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் சில இறுதித் தீர்மானங்களை எடுப்பார் என எதிர்பார்க்கப்படுவதாக சபாநாயகர் குறிப்பிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here