ஜனாதிபதியின் சௌபாக்கியா வேலைத்திட்டத்தின் கீழ் நோர்வூட் பிரதேச சபையில் சேதனை பசளையினை ஊக்குவிக்க நடவடிக்கை.

0
181

ஜனாதிபதியின் நச்சற்ற பூமி ஆரோக்கியமான வாழ்வு என்;ற எண்ணக்கருவுக்கமைவாக நாடு முழுவதும் இராசாயன பசளையினை தவிர்த்து சேதனை பசளை உற்பத்தியில் விவாசாயத்தினை முன்னெடுக்கும் நடவடிக்கைகள் மும்முரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இந்த வேலைத்திட்டத்திற்கமைவாக நாடு முழுவதும் தற்போது சேதனை பசளை தயாரிப்பதில் ஆர்வம் காட்டி வருகின்றன.
இதற்கமைய நோர்வூட் பிரதேசசபை தற்போது சேதனை பசளைகளை தயாரிப்பதனை விஸ்தரித்து அப்பகுதியில் விவசாயத்தில் ஈடுபடுவர்களுக்கு வழங்க நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.

தற்போது நோர்வூட் பிரதேச சபையில் நாளாந்தம் போது மக்கள் பயன்பாட்டிக்கு பின் அகற்றப்படும் கழிவுகள் மூன்று டொன் சேருவதாகவும் இதில் உக்கும் கழிவுகள் இரண்டு டொன் காணப்படுவதாகவும் இந்த உக்கும் கழிவுகளை மக்களுக்கு தெளிவூட்டி மேலும் அதிகரித்து சேதனை பசளை தயாரிப்பதனை அதிகரிக்க உள்ளதாகவும் இதற்காக அரசாங்கம் இருபது லட்சம் ரூபா வழங்கியுள்ளதாகவும் எதிர்காலத்தில் பிரதேசத்தில் கழிவுவகற்றும் வேலைத்திட்டத்தினை மேலும் முறைமைப்படுத்தி இந்த திட்டத்தினை முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் இதன் மூலம் பிரதேசத்தில் வீசி எறியப்படும் கழிவுகள் குறைந்து பிரதேச சுத்தமாவதாகவும் காணப்படும் என்றும் நோர்வூட் பிரதேச சபையின் தலைவர் கே.கே.ரவி தெரிவித்தார்.

பொகவந்தலா பகுதியில் அமைந்துள்ள சேதனை பசளை தயாரிக்கும் நிலையத்தினை விஸ்தர்ப்பதற்காக நேற்று மாலை (07) கண்காணிப்பு விஜயம் ஒன்றினை மேற்கொண்ட போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இது குறித்து சூழல் பொறுப்பதிகாரி யமுனா கருத்து தெரிவிக்கையில் இன்று பொது மக்களால் அகற்றும் சுமார் மூன்று டொன்; கழிவுகள் நோர்வூட் பிரதேச சபையினால் சேகரிக்கப்படுகின்றன இந்த கழிவுகளை முறையாக முகாமைத்துவப்படுத்துவதற்கு அண்மையில் இந்த சபை ஆரம்பிக்கப்பட்டதனால் பொதியளவு இடவசதிகள் இல்லை அத்தோடு ஆளனி பற்றாககுறைகள் நிலவுகின்றன.

தற்போது ஜனாதிபதியின் எண்ணக்கருவுக்கமைய நோர்வூட் பிரதேச சபையின் தலைவர் கே.கே.ரவி அவர்களின் ஆலோசனைக்கமைய நச்சற்ற பூமி ஆரோக்கியமான உணவு உற்பத்தி செயல் திட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இந்த சிறந்த செயத்திட்டத்திற்கமைவாக இந்த பிரதேசத்தில் உள்ள எதிர்கால சந்ததியினருக்கு சேதனை பசளையினை ஊக்குவித்து அதன் எதிர்கால சமூதாயத்திற்கு தேவையான உணவு உற்பத்திக்கு ஒத்துழைப்பதே எமது நோக்கம்.

எனவே இன்று நாங்கள் தற்காலி ஊழியர்களை கொண்N;ட இந்த சேதனை பசளை உற்பத்தியில் ஈடுபட்டு வருகின்றோம். இதனால் இவர்களுக்கு சம்பளம் பெற்றுக்கொடுப்பது கூட தற்போது சிரமான நிலையிலேயே இதனை செய்து வருகிறோம.; எங்களுக்கு நிரந்தர ஊழியர்களையும் இதற்கு தேவையான உபகரணங்களையும் பெற்றுக்கொடுத்தால் நாங்கள் திறன்பட இந்த வேலைத்திட்டத்தினை முன்னெடுப்போம் என அவர் மேலும் தெரிவித்தார்

இது குறித்து நுவரெலியா ஆணையாளர் அலுவலகத்தின் மேற்பார்வை உத்யோகஸ்த்தர் ஜனக்க கருத்து தெரிவிக்கையில் ஜனாதிபதி அவர்களின் சிறந்ததொரு வேலைத்திட்டமான இந்த வேலைத்திட்டம் நாடு முழுவதும் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகிறது இதனை நோர்வூட் பிரதேச சபை மிக அண்மையில் ஆரம்பித்தாலும் கூட அதன் தலைவர் இந்த திட்டத்தினை சிறந்த முறையில் முன்னெடுப்பதற்கு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார்.

மத்திய மகாணா ஆளுநர் மற்றும் உள்ளுராட்சி ஆணையாளர்களின் வழிகாட்டல்களுக்கு அமைவாக இந்த செயல்திட்டங்கள் தற்போது நடைமுறையில் காணப்பட்டாலும் அவற்றில் ஒரு சில குறைபாடுகள் நிலவுகின்றன. இதனை இன்னும் ஒரு சில வருடங்களில் பூர்த்தி செய்து அந்தந்த நிறுவனங்களுக்கு தேவையான உபகரணங்கள் வசதிகள் பெற்றுக்கொடுத்து இந்த திட்டத்தின் ஊடாக இந்த பிரதேச விவசாயிகளுக்கு பாரிய அளவில் உதவு முடியும் இந்த செயத்திட்டத்தி;னை முன்னெடுப்பதில் நோர்வூட் பிரதேச சபை மும்முரமாக இருப்பதாக அவர் மேலும் தெரிவித்தார்.

 

 

கே.சுந்தரலிங்கம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here