ஜனாதிபதியை அவமதித்தவருக்கு மரண தண்டனை

0
24

துனிசிய ஜனாதிபதியை அவமதித்ததற்காக அந்நாட்டு நீதிமன்றம் நபர் ஒருவருக்கு மரண தண்டனை விதித்துள்ளது.

56 வயதான சாதாரண தொழிலாளி ஒருவருக்கு இவ்வாறு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது இதே நேரம் இது குறித்து மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளதாக அந்த நபரின் சட்டத்தரணி தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதியை அவமதித்த காரணத்திற்காகவும் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் விடுவதற்காகவும் இந்த தண்டனை வழங்கப்பட்டதாக துனிசிய மனித உரிமைகள் லீக் தலைவர் தெரிவித்துள்ளார்.

கடந்த 2021 ஆம் ஆண்டு ஜனாதிபதி கைஸ் சயீத் ஆட்சி அமைத்ததில் இருந்து துனிசியாவில் கருத்து சுதந்திரத்திற்கு பெரும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாக சொல்லபப்டுகிறது.

மரண தண்டனைகள் விதிக்கப்படுகின்ற போதும் மூன்று தசாப்தங்களுக்கு மேலாக அவை நிறைவேற்றப்படவில்லை என்பது குறிப்பிடப்பத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here