“தற்போது இருப்பது சுதந்திரமான ஊடகங்கள் தானே” எனவும் முன்னாள் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி தேர்தலோ எந்த தேர்தலுக்கு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தயாராக இருப்பதாக முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைமையகத்தில் நடைபெற்ற பேச்சுவார்த்தை ஒன்றின் பின்னர் ஊடகங்களிடம் கருத்து வெளியிடும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
அரசாங்கம் நேரத்திற்கு தேர்தலை நடத்தும். எந்த தேர்தல் நடந்தாலும் அதற்கு நாங்கள் தயாராக இருக்கின்றோம்.
ஜனாதிபதி தேர்தல் நடந்தாலும் பிரச்சினையில்லை எனவும் மகிந்த ராஜபக்ச கூறியுள்ளார்.
இலத்திரனியல் ஊடகங்களை ஒழுங்குப்படும் அதிகார சபை சட்டமூல வரைவு தொடர்பாக இங்கு செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த முன்னாள் ஜனாதிபதி, அந்த சட்டமூல வரவை தான் இன்னும் காணவில்லை என கூறியுள்ளார்.
“தற்போது இருப்பது சுதந்திரமான ஊடகங்கள் தானே” எனவும் முன்னாள் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.