மாகாணசபைத் தேர்தலை முதலில் நடத்தி அதில் அரசுக்கு பின்னடைவு ஏற்பட்டால் அது ஜனாதிபதி தேர்தல் முடிவில் தாக்கம் செலுத்தும். 2024 முற்பகுதியில் ஜனாதிபதி தேர்தலை நடத்துவதற்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தீர்மானித்து விட்டார் என அரசியல் வட்டாரங்களில் இருந்து அறியமுடிகின்றது.
இது தொடர்பில் ஐக்கிய தேசியக் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்களுடன் அவர் ஆலோசனை நடத்தியுள்ளார் எனவும், விரைவில் மொட்டு கட்சியினருடனும் சந்திப்பு நடத்தவுள்ளார் எனவும் அரசியல் வட்டாரங்களில் இருந்து தெரியவருகின்றது.
மாகாணசபைத் தேர்தலை முதலில் நடத்தி அதில் அரசுக்கு பின்னடைவு ஏற்பட்டால் அது ஜனாதிபதி தேர்தல் முடிவில் தாக்கம் செலுத்தும் என்பதாலேயே ஜனாதிபதி தேர்தலை முதலில் நடத்துவதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ளது.
அதன்பின்னரே மாகாணசபைத் தேர்தல் மற்றும் பொதுத்தேர்தல் என்பன இடம்பெறும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.