ஜனாதிபதி பொது மன்னிப்பில் – மற்றுமொரு மோசடி அம்பலம்!

0
11

ஜனாதிபதி மன்னிப்பின் கீழ் மேற்கொள்ளப்பட்ட விடுதலை குறித்து அண்மையில் பல சர்ச்சைகள் எழுந்திருந்தன. அந்த வகையில் தற்போது மற்றுமொரு பிரச்சனையும் வெளிவந்துள்ளது.

இதில், முன்னாள் அமைச்சர் மில்ரோய் பெர்னாண்டோவின் மனைவி மேரி ஜூலியட் மோனிகா பெர்னாண்டோவின் விடுதலையும், ஜனாதிபதி மன்னிப்பின் கீழ் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

பதவி நீக்கம் செய்யப்பட்ட சிறைச்சாலைகள் ஆணையாளர் துசார உப்புல்தெனியவின் வழக்கு, கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே இந்த விடயம் வெளிப்படுத்தப்பட்டுள்ளது.

முன்னதாக, 2 பெண்களைக் கடத்தி கொலை செய்ததற்காக அவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது.

எனினும், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவிடமிருந்து ஜனாதிபதி மன்னிப்பைப் பெற்ற பின்னர், 2009ஆம் ஆண்டு மார்ச் மாதம் மேரி ஜூலியட் மோனிகா பெர்னாண்டோ விடுவிக்கப்பட்டார்.

இது சர்வதேச மகளிர் தினத்துடன் தொடர்புடைய மன்னிப்பாக அறிவிக்கப்பட்டதாகச் சட்டமா அதிபர் திணைக்களம் மன்றில் சுட்டிக்காட்டியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here