இன்று (22) முதல் அமுலுக்கு வரும் வகையில் நாடு முழுவதுமான பாதுகாப்பினை பலப்படுத்த முப்படைகளுக்கும் அழைப்பு விடுத்து ஒரு விசேட வர்த்தமானி அறிவிப்பு ஒன்றினை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வெளியிட்டுள்ளார்.
பொது பாதுகாப்பு கட்டளைச் சட்டத்தில் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களின் படி பொது ஒழுங்கைப் பேணுவதற்கு இலங்கையின் அனைத்து நிர்வாக மாவட்டங்களும் மற்றும் அந்தந்த மாவட்டத்தை ஒட்டியுள்ள கடற்பரப்பினை சூழவுள்ள பாதுகாப்பிற்காக முப்படையினரையும் அழைக்கும் வகையில் இந்த வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.