ஜப்னா கிங்ஸ் முதல் வேற்றி.

0
186

லங்கா பிரீமியர் லீக் தொடரில் இன்று பிற்பகல் நடைபெற்ற தம்புள்ளை ஜெயன்ட்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் ஜப்னா கிங்ஸ் அணி 8 விக்கெட்டுகளினால் வெற்றி பெற்றுள்ளது.

2021 லங்கா பிரீமியர் லீக் டி-20 கிரிக்கெட் தொடரின் நான்காவது போட்டி இன்று மாலை 3.30 மணிக்கு கொழும்பு, ஆர்.பிரேமதாச மைதானத்தில் திசர பெரேரா தலைமையிலான ஜப்னா கிங்ஸ் மற்றும் தசூன் சானக்க தலைமையிலான தம்புள்ளை ஜெயன்ட்ஸ் அணிகளுக்கு இடையில் ஆரம்பமானது.

போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற தம்புள்ளை அணி முதலில் துடுப்பெடுத்தாடி 19.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 110 ஓட்டங்களை மாத்திரமே பெற்றது.

அணி சார்பில் அதிகபடியாக நுவனிந்து பெர்னாண்டோ 23 ஓட்டங்களை பெற, ஏனைய வீரர்கள் அனைவரும் குறைந்த ஓட்டத்துடன் ஆட்டமிழந்தனர்.

பந்து வீச்சில் ஜப்னா கிங்ஸ் சார்பில் வனிந்து ஹசரங்க, மஹேஷ் தீக்ஷன ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளையும், லக்மால் மற்றும் ஜெய்டன் சீல்ஸ் தலா ஒவ்வொரு விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

பின்னர் 114 ஓட்டம் என்ற வெற்றி இலக்கினை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய ஜப்னா கிங்ஸ் 12.3 ஓவர்களிலேயே வெற்றி இலக்கினை கடந்தது.

ஆரம்ப வீரர்களான ரஹ்மானுல்லா குர்பாஸ் 3 ஓட்டங்களுடனும், அவிஷ்க பெர்னாண்டோ 27 ஓட்டங்களுடனும் ஆட்டமிழக்க டாம் கோஹ்லர்-காட்மோர் 45 ஓட்டங்களுடனும், சோயிப் மாலிக் 26 ஓட்டங்களுடனும் ஆட்டமிழக்கதிருந்தனர்.

போட்டியின் ஆட்டநாயகனாக மகேஷ் தீக்ஷன தெரிவானார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here