ஜப்பானின் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபேயின் மறைவுக்கு இ.தொ.கா தலைவர் செந்தில் தொண்டமான் இரங்கல் தெரிவித்துள்ளார்.
இலங்கையுடன் ஜப்பான் ஒரு நெருங்கிய நட்புறவை வைத்திருந்தமைக்கு ஷின்சோ அபேயி நட்பு பாலமாக திகழ்ந்துள்ளார். இரு நாடுகளுக்கும் இடையிலான ராஜதந்திர செயற்பாடுகளை முன்னெடுப்பதில் முக்கிய பங்கு வகித்தார்.
இவருடைய இழப்பால் வாடும் குடும்ப உறுப்பினர்கள், நண்பர்கள் மற்றும் ஜப்பான் மக்களுக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்வதோடு, அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கிறேன் என தெரிவித்துள்ளார் .