ஜப்பானிய அரசு இலங்கை இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகளை வழங்க இணக்கம் தெரிவித்துள்ளது.
ஜப்பானில் விவசாயப் பண்ணைகளில் ஆயிரம் இலங்கையர்களுக்கு வேலைவாய்ப்பை வழங்க ஜப்பானிய அரசு ஒப்புக்கொண்டுள்ளதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.
அடுத்த இரு வாரங்களுக்குள் இது தொடர்பில் புரிந்துணர்வு உடன்படிக்கை கைச்சாத்திடப்படும் என ஜப்பானுக்கான இலங்கைத் தூதுவர் குணசேகர தெரிவித்தார்.
இந்த வேலை வாய்ப்புகளுக்குத் தேர்ந்தெடுக்கப்படும் இளைஞர்கள் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்துடன் இணைந்து தேவையான மொழிப் பயிற்சி மற்றும் பிற தொடர்புடைய பயிற்சித் தேவைகளைப் பூர்த்தி செய்ய முடியும் என்று அமைச்சர் மேலும் கூறினார்.