இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் பொதுச்செயலாளரும் இராஜாங்க அமைச்சருமான ஜீவன் தொண்டமானின் பிறந்தநாளையொட்டி கொத்மலை பிரதேச சபைக்குஉட்பட்ட சுயத்தொழில் ஊக்குவிப்பாளர்கள் பலருக்கு பல லட்சம் பெறுமதியான கைத்தொழில் உபகரணங்கள் கொத்மலை பிரதேச சபை கேட்போர் கூடத்தில் செவ்வாய்க்கிழமை(09/11/2021) கையளிக்கப்பட்டது.
இதன்போது இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான்,நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் மருதபாண்டி ராமேஷ்வரன்,கொத்மலை பிரதேசபை தலைவர் சுசந்த,மற்றும் கொத்மலை பிரதேச சபை உறுப்பினர்கள், பயனாளர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
நீலமேகம் பிரசாந்த்