ஜீவன் தொண்டமானின் பிறந்த தினத்தையொட்டி பொருளாதார ரீதியில்  பின்தங்கியவர்களுக்கு உதவி.

0
179
இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும் தோட்ட வீடமைப்பு மற்றும் சமுதாய உட்கட்டமைப்பு வசதிகள் இராஜாங்க அமைச்சருமான ஜீவன் தொண்டமானின் பிறந்த தினத்தையொட்டி இன்றைய தினம் பல்வேறு நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தன.
அந்த வகையில் பொருளாதார ரீதியில்  பின்தங்கியிருக்கும் தெரிவு செய்யப்பட்ட 25 பாடசாலை மாணவர்களுக்கு அவர்களது கல்வி செயற்பாடுகளை முன்னெடுத்துச் செல்வதற்காக புலமைப்பரிசில் (காசோலை) மற்றும் புத்தகப்பை, பாடசாலை உபகரணங்கள் வழங்கிவைக்கப்பட்டன.
மேலும்  கொத்மலை பிரதேச சபைக்கு உட்பட்ட பகுதிகளில்  சுயதொழிலை ஊக்குவிக்கும் முகமாக இயந்திரம் பழுதுபார்க்கும் இளைஞர்களுக்கு அவர்களுக்கான உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டது.
அத்தோடு அம்பகமுவ பிரதேச செயலகத்திற்கு நோர்வூட் சமுர்த்தி  வங்கி ஏற்பாடு செய்யபட்ட  சுயதொழில் மேற்கொள்ளவிருக்கும் இளைஞர் யுவதிகளுக்கு உபகரணங்களும் ,தையல் இயந்திரங்கள் வழங்கி வைக்கப்பட்டன.
இந் நிகழ்வில் இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான், நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மருதபாண்டி ராமேஸ்வரன் மற்றும் அம்பகமுவ பிரதேச செயலாளர் ,இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் உபதலைவர்களான ஏ.பி சத்திவேல் ,கணபதி கணகராஜ் ,எ.பிலிப்குமார் பிரதேச சபை தலைவர்கள் ,உறுப்பினர்கள் இ.தொ.காவின் முக்கியஸ்த்தர்கள் உள்ளிட்ட பலர் கலந்துக்கொண்டனர்.
டி,சந்ரு

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here