இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும், அமைச்சருமான ஜீவன் தொண்டமானுக்கு எதிராக பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியால் நுவரெலியா மாவட்ட பிரதி பொலிஸ்மா அதிபர் அலுவலகத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.ஐக்கிய மக்கள் சக்தியின் நுவரெலியா ஹங்குராங்கெத்த அமைப்பாளரான ஹிரண்யா ஹேரத்தே இந்த முறைப்பாட்டை தாக்கல் செய்துள்ளார்.
அமைச்சர் ஜீவன் தொண்டமான் பொகவந்தலாவ நகரில் வைத்து பொலிஸ் அதிகாரிகளை அச்சுறுத்தி, அவர்களின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்துள்ளார் என சுட்டிக்காட்டி, இது தொடர்பில் விசாரணை நடத்தப்பட வேண்டும் என அவர் கோரியுள்ளார்.
சந்ரு, கிஸாந்தன்