மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர நேற்று (04) மின்சார நுகர்வோர் கட்டண திருத்தப் பிரேரணையை இறுதி செய்வது தொடர்பாக இலங்கை மின்சார சபையின் கட்டண பிரிவினருடன் கலந்துரையாடல் ஒன்றை நடத்தினார்.
செலவுகளை பிரதிபலிக்கும் கட்டண பொறிமுறையை நடைமுறைப்படுத்துவதற்கு அரசாங்கம் கடந்த வருடம் கொள்கை முடிவொன்றை எடுத்ததாகவும், அதன்படி ஒவ்வொரு வருடமும் காலாண்டுக்கு ஒருமுறை கட்டணத்தை திருத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.
அதன்படி, ஜூலை மாதம் திருத்தம் மேற்கொள்ளப்படும் என்றும், இது தொடர்பான கட்டண முன்மொழிவு இந்த வாரம் பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழுவில் சமர்ப்பிக்கப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.