ஜெப்பல்டன் தோட்டபகுதியில் மாணிக்ககல் சுரங்ககுழிகள் மூடப்படாமை குறித்து மக்கள் விசனம்

0
120

பொகவந்தலாவ ஜெப்பல்டன் தோட்டபகுதியில் அகழபட்ட மாணிக்ககல் சுரங்ககுழிகள் மூடப்படாமல் பேக்கோ இயந்திரங்களை கொண்டு சென்றமையால் மக்கள் விசனம்

தேசிய இரத்தினகல் மற்றும் தங்க ஆபரணங்கள் அதிகாரசபையினால் பொகவந்தலாவ ஜெப்பல்டன் தோட்டபகுதியில் முன்னெடுக்கபட்டு வந்த மாணிக்கல் அகழ்வினால் குறித்த பகுதி நீர் தேக்கங்களாக காட்சியளிப்பதாகவும் அப்பகுதியில்
காணபடுகின்ற பாரிய மாணிக்ககல் சுரங்க குழிகளை மண்யிட்டு மூடப்போவதாக கூறி பேக்கோ இயந்திரங்களை கொண்டு வந்து சுமார் 08 மாதகாலமாக நிறுத்திவைத்து விட்டு கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு குறித்த இயந்திரங்களை கொண்டு
சென்றமை தொடர்பில் பிரதேசமக்கள் விசனம் வெளியிட்டுள்ளனர்.

தேசிய இரத்தினகல் மற்றும் தங்க ஆபரணங்கள் அதிகாரசபையின் அனுமதியோடு சுமார் மூன்று வருடங்களும் இரண்டு மாதங்கள் பொகவந்தலாவ பெறுந்தோட்ட கம்பணிக்கு சொந்தமான காணியில் மாணிக்கல் அகழ்வினை மேற்கொண்டு
வந்தபோதிலும் மாணிக்கல் அகழ்விற்கான ஒப்பந்தம் நிறைவடைந்து ஒருவருடங்கள் கடந்துள்ள நிலையில் குறித்த பகுதியில் காணபடுகின்ற மாணிக்ககல் பாரிய சுரங்க குழிகளை இதுவரையிலும் மூடப்படாமல் காணபடுகின்றமையால் அப்பகுதியில்
கால்நடை வளர்ப்பில் ஈடுபடுவோர்கள் பெரிதும் பாதிக்கபட்டுள்ளதாக தெரிவிக்கபடுகிறது

குறித்த பகுதியில் அகழபட்ட பாரிய குழிகள் மூடபடாமையினால் கால்நடை வளர்ப்பில் ஈடுபடுவோர்கள் பலாங்கொடை பின்னவல மாரத்தென்ன போன்ற பகுதிக்கு சென்று கால்நடைகளுக்கான புற்களை வாகனத்தின் மூலம் பொகவந்தலாவ ஜெப்பல்டன் தோட்டபகுதிக்கு கொண்டு வருவதாக இம் மக்கள் குறிப்பிடுகின்றனர்

பொகவந்தலாவ ஜெப்பல்ட்டன் தோட்டபகுதியில் அகழபட்ட மாணிக்ககல் சுரங்க குழிகள் மூடப்படவேண்டுமென பலமுறை அம்பகமுவ பிரதேச அபிவிருத்தி குழு கூட்டத்தில் அதன் இணைதலவர்களான கல்வி இராஜாங்க அமைச்சர் வேலுசாமி
இராதகிருஸ்னண் மற்றும் முன்னால் மத்திய மகாணசபை உறுப்பினர் கணபதி கனகராஜ் ஆகியோர் வழியுருத்தி வந்தபோதிலும் சுரங்க குழிகளை மூடிதருவதாக உறிய அதிகாரிகள் வாக்குருதி வழங்கபட்டனர். ஆனால் இதுவரையிலும் இந்த சுரங்க
குழிகள் மூடப்படவில்லை

நாட்டில் தொடரும் சீர்ரற்ற காலநிலை காரணமாக தொடரும் மழை காரணமாக சுரங்க குழிகளில் மழை நீர் நிரம்பி கேசல்கமுவ ஓயாவில் கலக்கபடுகின்றமையால் கேசல்கமுவ ஓயா நீர் மாசடைவதாகவும் தெரிவிக்கபடுகிறது. எனவே குறித்த பகுதியில்
கழபட்ட சுரங்ககுழிகளை உடனடியாக மூடிதருவதற்கு மலையக தலைமைகள் நடவடிக்கை
எடுக்கப்பட வேண்டுமென பிரதேசமக்கள் கோறிக்கை விடுக்கின்றனர்.

 

 

(பொகவந்தலாவ நிருபர் எஸ்.சதீஸ்)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here