ஜெமினிட் விண்கல் மழை – இலங்கையர்களுக்கு கிடைத்த அரிய வாய்ப்பு

0
4

வருடத்தின் சிறப்பு வாய்ந்த விண்கல் மழைகளில் ஒன்றாக கருதப்படும் ஜெமினிட் விண்கல் பொழிவை இலங்கையினர் பார்வையிடுவதற்கான சந்தர்ப்பம் கிட்டியுள்ளது.

அதன்படி, இந்த வருடத்தில் மிக அற்புதமான ஜெமினிட் விண்கல் மழையை இன்றும் நாளையும் இரவு நேரத்தில் வானில் காண முடியும் என ஆர்தர் சி. கிளார்க் மையம் தெரிவித்துள்ளது.

அதன்படி, நாளை இரவு விண்கற்களின் அற்புதமான மற்றும் உச்சகட்ட பொழிவினை இலங்கையர்கள் பார்வையிடலாம்.

இரவு 9 மணிக்குப் பின்னர் வடகிழக்கு வானில் இந்த விண்கற்கள் பொழிவு தென்படும் என ஆர்தர் சி.கிளார்க் மையத்தின் வானியல் சிரேஷ்ட ஆராய்ச்சி விஞ்ஞானி இந்திக மெதகங்கொட தெரிவித்தார்.

ஜெமினிட்ஸ் விண்கல் பொழிவு இந்த ஆண்டின் மிகவும் சிறந்த விண்கல் மழைகளில் ஒன்றாக கருதப்படுகிறது.

ஆங்கிலத்தில் ஜெமினிட்ஸ் என சொல்லப்படும் இந்த எரிகல் மழை உச்சத்தை அடையும் சமயத்தில் ஒரு மணி நேரத்தில் நூற்றுக்கணக்கான எரிகற்களை நாம் காண முடியும்.

விண்கற்கள் பூமியின் வளி மண்டலத்துக்குள் நுழைந்தவுடன் எரிந்து சாம்பலாவதால் ஏற்படும் நெருப்புச் சிதறல் நட்சத்திரம் புஸ்வாணம் போல சீறிப் பாய்வதாக காட்சியளிக்கும்.

மேகமூட்டமில்லாமல் வானம் தெளிவாக இருக்கும் இடங்களில் தொலைநோக்கிகள் இல்லாமல் வெறும் கண்ணுக்கே இந்த எரிகல் மழை தென்படும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here