கொட்டக்கலை பிரதேச சபைக்குட்பட்ட 675பீ கிராம சேவகர் பிரிவில் திம்புள பத்தனை ஜெயஸ்ரீ புர சீ கொலனியில் நீண்ட காலமாக ஆபத்தான நிலையில் காணப்பட்ட மின்சார தூண்கள் அகற்றப்பட்டு புதிய மின்சார தூண்களை பொறுத்துவதற்கான நடவடிக்கை கொட்டக்கலை பிரதேச சபை உப தலைவர் முத்துராமலிங்கம் ஜெயகாந்த் ஊடாக முன்னெடுக்கப்பட்டது.
குறித்த பகுதியில் ஆபத்தான மின்சார தூண்களால் மழை காலங்களிலும் சீரற்ற வானிலை காலங்களின் போது அச்சுறுத்தலான நிலையில் வாழ்க்கையை முன்னெடுப்பதாக கூறி பொது மக்கள் வழங்கிய பிரேரணைக்கு அமைய இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமானின் ஆலோசணைக்கு அமைய கொட்டக்கலை பிரதேச சபை தவிசாளர் மேற்பார்வையில் விரைவாக ஆபத்தான மின்சார தூண்கள் அகற்றப்பட்டு பாதுகாப்பான தூண்கள் உபத்தலைவர் முத்து ராமலிங்கம் ஜெயகாந்த் ஊடாக பொறுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
நீலமேகம் பிரசாந்த்