ஜெயிலர் பட வில்லன் கைது ; கேரளா திரையுலகில் பரபரப்பு

0
197

மாற்றுத்திறனாளியாக நடித்த அவர் நடிப்பில் மட்டுமின்றி தனது வசன உச்சரிப்பின் மூலமும் கவனம் ஈர்த்தார். ஜெயிலர் படத்தில் வில்லனாக நடித்த விநாயகன் கைது செய்யப்பட்டிருக்கிறார். மலையாளம், ஹிந்தி, தெலுங்கில் நடித்த விநாயகன் திமிரு படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு வந்தார்.

விஷால் நடித்த அந்தப் படத்தில் அவரது அண்ணியான ஸ்ரேயா ரெட்டிக்கு துணை நிற்கும் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். மாற்றுத்திறனாளியாக நடித்த அவர் நடிப்பில் மட்டுமின்றி தனது வசன உச்சரிப்பின் மூலமும் கவனம் ஈர்த்தார்.

அதைத் தொடர்ந்து சிலம்பாட்டம், எல்லாம் அவன் செயல், மரியான், ஜெயிலர் உள்ளிட்ட தமிழ் படங்களில் நடித்திருக்கிறார். இந்நிலையில் நடிகர் விநாயகன் நன்றாக குடித்துவிட்டு எர்ணாகுளம் வடக்கு பொலிஸ் நிலையத்துக்குள் சென்று தகராறு செய்திருக்கிறார்.

இந்த சம்பவத்தினால் வழக்கு பதிவு செய்து விநாயகனை பொலிஸார் கைது செய்துள்ளனர். அவர் கைது செய்யப்பட்டது கேரளா திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here